Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 6

Release Notes

Red Hat Enterprise Linux 6.5 க்கான வெளியீட்டுக் குறிப்புகள்

பதிப்பு 5

Red Hat Engineering Content Services


சட்டஅறிக்கை

Copyright © 2013 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
 RaleighNC 27606-2072 USA
 Phone: +1 919 754 3700
 Phone: 888 733 4281
 Fax: +1 919 754 3701

சுருக்கம்
வெளியீட்டுக் குறிப்புகள், Red Hat Enterprise Linux 6.5 இல் செயல்படுத்தப்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் கூடுதல் அம்சங்கள் பற்றிய உயர் நிலை தகவலை வழங்கும். 6.5 புதுப்பிப்புக்கான Red Hat Enterprise Linux இல் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களைப் பறிய விரிவான ஆவணமாக்கத்திற்கு தொழில்நுட்பக் குறிப்புகள் ஐப் பார்க்கவும்.

முன்னுரை
1. கெர்னல்
2. பிணையமாக்கல்
3. பாதுகாப்பு
4. சந்தா நிர்வாகம்
5. மெய்நிகராக்கம்
5.1. KVM
5.2. Microsoft Hyper-V
5.3. VMware
6. சேமிப்பகம்
7. க்ளஸ்டரிங்
8. வன்பொருள் செயல்படுத்தல் தன்மை
9. தொழிற்துறை தரநிலைகள் மற்றும் சான்றளிப்பு
10. Desktop and Graphics
11. செயல்திறன் மற்றும் மறுஅளவிடல் தன்மை
12. கம்பைலர் மற்றும் கருவிகள்
A. கூறு பதிப்புகள்
B. மறுபார்வை வரலாறு

முன்னுரை

Red Hat Enterprise Linux சிறு வெளியீடுகள் என்பவை தனித்தனியான மேம்பாடுகள், பாதுகாப்பு மற்றும் வழு நீக்கல் தொகுப்புகளின் சேர்க்கையாகும். Red Hat Enterprise Linux 6.5 வெளியீட்டுக் குறிப்புகள், Red Hat Enterprise Linux 6 இயக்க முறைமை மற்றும் இந்த சிறு வெளியீட்டுடன் உள்ள பயன்பாடுகளுக்கு செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது. இந்த சிறு வெளியீட்டிலான மாற்றங்களின் (நீக்கப்பட்ட வழுக்கள், சேர்க்கப்பட்ட மேம்பாடுகள் மற்றும் கண்டறியப்பட்ட தெரிந்த சிக்கல்கள் போன்றவை) விவரமான குறிப்புகள் தொழில்நுட்பக் குறிப்புகள் இல் கிடைக்கும். தொழில்நுட்பக் குறிப்புகளில் தற்போது கிடைக்கும் தொழில்நுட்ப மாதிரிகள் மற்றும் அவற்றை வழங்கும் தொகுப்புகளின் முழுமையான பட்டியலும் உள்ளது.

முக்கியம்

ஆன்லைனில் here என்ற முகவரியில் உள்ள ஆன்லைன் Red Hat Enterprise Linux 6.5 வெளியீட்டுக் குறிப்புகள் வரையறுக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகக் கருதப்பட வேண்டும். வெளியீடு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்குக் கேள்விகள் இருந்தால், அவர்கள் தங்கள் Red Hat Enterprise Linux இன் பதிப்புக்கு உரிய வெளியீட்டு மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் ஐக் காணுமாறு பரிந்துரைக்கிறோம்.
Red Hat Enterprise Linux வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி உங்களுக்கு மேலும் தகவல் வேண்டுமானால் https://access.redhat.com/support/policy/updates/errata/ ஐப் பார்க்கவும்.

பாடம் 1. கெர்னல்

Red Hat Enterprise Linux 6.5 உடன் வழங்கப்படும் கெர்னலில் Linux கெர்னலுக்கான சில நூறு வழுக்கள் திருத்தப்பட்டுள்ளது, அத்துடன் பல மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டுக்கு கெர்னலில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியமான வழு நீக்கல்கள் மற்றும் மேம்பாடுகள் பற்றிய விவரத்திற்கு Red Hat Enterprise Linux 6.5 தொழில்நுட்பக் குறிப்புகள் இன் கெர்னல் பிரிவைப் பார்க்கவும்.

PMC-Sierra கார்டுகள் மற்றும் கன்ட்ரோலர்களுக்கான ஆதரவு

pm8001/pm80xx இயக்கியில் PMC-Sierra Adaptec வரிசை 6H மற்றும் 7H SAS/SATA HBA கார்டுகள் மற்றும் PMC Sierra 8081, 8088 மற்றும் 8089 சிப் அடிப்படையிலான SAS/SATA கன்ட்ரோலர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.

பதிலளிக்காத சாதனங்களுக்கு காலாவதி நேரத்தை அமைவாக்கம் செய்யும் வசதி

சில குறிப்பிட்ட சேமிப்பக அமைவாக்கங்களில் (எடுத்துக்காட்டாக, பல LUNகளைக் கொண்ட அமைவாக்கங்கள்), SCSI பிழை கையாளுதல் குறியீடானது, பதிலளிக்காத சேமிப்பக சாதனங்களுக்கு TEST UNIT READY போன்ற கட்டளைகளை வழங்கி பெருமளவு நேரத்தை செலவிடக்கூடும். SCSI சாதனப் பொருளுடன் eh_timeout என்ற ஒரு புதிய sysfs அளவுரு சேர்க்கப்பட்டுள்ளது, இது SCSI பிழை கையாளுதல் குறியீடு பயன்படுத்தும் TEST UNIT READY மற்றும் REQUEST SENSE கட்டளைகளுக்கு காலாவதி மதிப்பை அமைவாக்கம் செய்யும் வசதியை அளிக்கிறது. இதனால் பதிலளிக்காத இந்த சாதனங்களை சோதிப்பதற்கான நேரம் குறைகிறது. eh_timeout அளவுருவுக்கான முன்னிருப்பு மதிப்பு 10 வினாடிகளாகும், இது இந்த செயலம்சத்தைச் சேர்ப்பதற்கு முன்பு இருந்த காலாவதி மதிப்பாகும்.

பிழை மீட்டெடுப்புக்கான அதிகபட்ச நேரத்தை அமைவாக்கம் செய்தல்

SCSI வழங்கி பொருளில் eh_deadline எனும் ஒரு புதிய sysfs அளவுரு சேர்க்கப்பட்டுள்ளது, இது SCSI பிழை கையாளுதல் அம்சமானது, பிழை மீட்டெடுப்பு செயலுக்கு முயற்சி செய்யும் போது, முயற்சியைக் கைவிட்டுவிட்டு வழங்கி பஸ் அடாப்டரை (HBA) முழுவதுமாக மீட்டமைக்கும் முன்பு தொடர்ந்து முயற்சி செய்ய எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரத்தின் அளவை அமைவாக்கம் செய்ய உதவுகிறது. இந்த அளவுருவின் மதிப்பு வினாடிகளில் குறிப்பிடப்படுகிறது, அதன் முன்னிருப்பு மதிப்பு பூச்சியமாகும், இந்த முன்னிருப்பு மதிப்பு நேர வரம்பை முடக்கி, பிழை மீட்டெடுப்பு முழுவதும் நடந்து முடிய வகை செய்கிறது. sysfs ஐப் பயன்படுத்துவதுடன், eh_deadline கெர்னல் மதிப்புருவைப் பயன்படுத்தி SCSI HBAகள் அனைத்துக்கும் ஒரு முன்னிருப்பு மதிப்பையும் அமைக்க முடியும்.

Lenovo X220 தொடுதிரை ஆதரவு

இப்போது Red Hat Enterprise Linux 6.5 Lenovo X220 தொடுதிரையை ஆதரிக்கும்.

பாடம் 2. பிணையமாக்கல்

துல்லிய நேர நெறிமுறை

Red Hat Enterprise Linux 6.4 இல், Linux க்கான IEEE தரநிலை 1588-2008 க்கு இணங்க துல்லிய நேர நெறிமுறையின் (PTP) அம்ச செயல்படுத்தல் தொழில்நுட்ப மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Red Hat Enterprise Linux 6.5 இல் கெர்னல் மற்றும் பயனர் வெளி ஆகிய இரண்டுக்கும் PTP உட்கட்டமைப்பு முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. பிணைய இயக்கி நேர முத்திரையிடல் ஆதரவில் இப்போது பின்வரும் இயக்கிகளும் உள்ளடங்கும்: bnx2x, tg3, e1000e, igb, ixgbe மற்றும் sfc.

அமைவாக்கமல்லாத IP மல்டிகாஸ்ட் IGMP வேவுபார்த்தல் தரவைப் பகுப்பாய்வு செய்தல்

முன்பு, பிரிட்ஜ் தொகுதிக்கூறு sysfs மெய்நிகர் கோப்புமுறைமையானது, அமைவாக்கமல்லாத IP மல்டிகாஸ்ட் இணையக் குழு மேலாண்மை நெறிமுறை (IGMP) வேவுபார்த்தல் தரவை ஆய்வு செய்யும் திறனை வழங்கவில்லை. இந்த செயலம்சம் இல்லாமல் பயனர்களால் தங்கள் மல்டிகாஸ்ட் போக்குவரத்தை முழுமையாகப் பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. Red Hat Enterprise Linux 6.5 இல், பயனர்கள் கண்டறியப்பட்ட மல்டிகாஸ்ட் ரௌட்டர் முனையங்கள், செயலிலுள்ள சந்தாதாரர்களைக் கொண்டுள்ள குழுக்கள் மற்றும் தொடர்புடைய இடைமுகங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுப் பார்க்க முடியும்.

NetworkManager இல் PPPoE இணைப்புகள் ஆதரவு

ஈத்தர்நெட் (PPPoE) அடிப்படையிலான இணைப்புகளின் வழியாக பாயின்ட்-டு-பாயின்ட் நெறிமுறையை உருவாக்குவதையும் நிர்வகிப்பதையும் ஆதரிக்கும் வகையில் NetworkManager மேம்படுத்தப்பட்டுள்ளது; எடுத்துக்காட்டாக DSL, ISDN மற்றும் VPN இணைப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் இணைப்புகளைக் கூறலாம்.

OpenStack க்குக்கான பிணைய பெயரிடைவெளி ஆதரவு

Network பெயரிடைவெளிகள் (netns) என்பது கன்டெய்னர் அடிப்படையிலான லேசான ஒரு மெய்நிகராக்கத் தொழில்நுட்பமாகும். ஒரு மெய்நிகர் பிணைய அடுக்கானது ஒரு செயலாக்கக் குழுவுடன் தொடர்புபடுத்தப்பட முடியும். ஒவ்வொரு பெயரிடைவெளிக்கும் அதற்கே உரிய ஒரு லூப்பேக் சாதனமும் செயலாக்க வெளியும் உள்ளது. ஒவ்வொரு பெயரிடைவெளிக்கும் மெய்நிகர் அல்லது உண்மையான சாதனங்கள் இணைக்கப்பட முடியும், மேலும் பயனர்கள் இந்த சாதனங்களுக்கு IP முகவரிகளை நியமித்து இவற்றை இணைய கனுவாகப் பயன்படுத்தவும் முடியும்.

கிரிப்டோகிராபி ஹாஷ் செயலம்சத்தை மாற்றுவதற்கான SCTP ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல், பயனர்கள் ஸ்ட்ரீம் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் ப்ரோட்டோக்கல் (SCTP) இணைப்புகளுக்கு கிரிப்டோகிராபி ஹாஷ் செயல்பாட்டை MD5 இலிருந்து SHA1 க்கு மாற்ற முடியும்.

SCTP க்கான M3UA அளவீட்டு கவுன்ட்டர்கள்

மெசேஜ் டிரான்ஸ்ஃபர் பார்ட் லெவல் 3 யூசர் அடாப்ட்டேஷன் லேயர் (M3UA) என்பது, MTP நிலை 3 பயனர் பகுதி சமிக்ஞையிடுதல் செய்திகளை வழக்கமான தொலைத்தொடர்பு பிணையங்களைப் (ISDN மற்றும் PSTN) பயன்படுத்தாமல், ஸ்டிரீம் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் ப்ரொட்டக்கலைப் (SCTP) பயன்படுத்தி IP வழியாக அனுப்புவதற்காக, IETF வரையறுத்துள்ள ஒரு நெறிமுறையாகும்.

iproute ஐப் பயன்படுத்தி DOVE டன்னல்களை நிர்வகித்தல்

டிஸ்ட்ரிபியூட்டட் ஓவர்லே விர்ச்சுவல் ஈத்தர்நெட் (DOVE) டன்னல்கள், மெய்நிகர் முறையில் நீட்டிக்கக்கூடிய உள்ளமைப் பகுதி பிணையத்தைக் (VXLAN) கட்டமைக்க வழிவகை செய்கிறது, இது க்ளௌடு மையங்களில் பயன்படுத்தப்படும் ISO OSI அடுக்கு 2 பிணையங்களுக்கான ஒரு அளவீடு செய்யத்தக்க தீர்வாக அமைகிறது. bridge கருவியானது iproute தொகுப்பின் ஒரு பகுதியாகும், அதை எடுத்துக்காட்டாக Linux இயங்குதளங்களில் உள்ள WXLAN சாதனங்களில் உள்ள ஒரு முன்னனுப்பல் தரவகத்தை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படலாம்.

பாடம் 3. பாதுகாப்பு

FIPS 140-2 சான்றளிப்பு தொடர்பான மாற்றங்கள்

Red Hat Enterprise Linux 6.5 இல், கெர்னலானது FIPS பயன்முறையில் இயங்குகிறதா இல்லையா என்பது கருத்தில் கொள்ளப்படாமல், dracut-fips தொகுப்பானது இருக்கும் நிலையில் முழுமைத்தன்மை சரிபார்த்தல் செயல் செய்யப்படுகிறது. Red Hat Enterprise Linux 6.5 ஐ FIPS 140-2 இணக்கமானதாக எப்படி மாற்றுவது என்பது பற்றிய விரிவான தகவலுக்கு பின்வரும் தகவல் களஞ்சியத் தீர்வைக் காணவும்:

OpenSSL பதிப்பு 1.0.1 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது

இந்தப் புதுப்பிப்பில் GlusterFS இல் வெளிப்படையான குறியாக்கம் மற்றும் அங்கீகரிப்புக்குத் தேவையான பின்வரும் சிஃபர்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
  • CMAC (சிஃபர்-அடிப்படையிலான MAC)
  • XTS (XEX Ciphertext திருடுதல் அம்சத்துடன் கூடிய சரிசெய்யக்கூடிய பிளாக் சிஃபர்)
  • GCM (Galois/கவுன்ட்டர் பயன்முறை)

OpenSSH இல் ஸ்மார்ட்கார்டு ஆதரவு

இப்போது OpenSSH ஆனது PKCS #11 தரநிலையுடன் இணங்குகிறது, இதனால் அங்கீகரிப்புக்காக OpenSSH ஆனது ஸ்மார்ட்கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.

OpenSSL இல் ECDSA ஆதரவு

நீள்வட்ட வளை டிஜிட்டல் கையொப்ப வழிமுறை (ECDSA) என்பது டிஜிட்டல் கையொப்ப வழிமுறையின் (DSA) ஒரு வகையாகும், அது நீள்வட்ட வளை கிரிப்டோகிராபியைப் (ECC) பயன்படுத்துகிறது. nistp256 மற்றும் nistp384 வளைவுகள் மட்டுமே ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

OpenSSL இல் ECDHE ஆதரவு

எஃப்மெரல் நீள்வட்ட வளைவு டிஃபி-ஹெல்மேன் (ECDHE) ஆதரிக்கப்படும், இது குறைந்த கணக்கீட்டுத் தேவைகளுடனான துல்லியமான முன்னனுப்பல் இரகசியத்தன்மையை வழங்குகிறது.

OpenSSL மற்றும் NSS இல் TLS 1.1 மற்றும் 1.2 இன் ஆதரவு

இப்போது OpenSSL மற்றும் NSS டிரான்ஸ்போர்ட் அடுக்கு பாதுகாப்பு (TLS) நெறிமுறையின் சமீபத்திய பதிப்புகளை ஆதரிக்கிறது, இது பிணைய இணைப்புகளின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், மற்ற TLS நெறிமுறை செயல்படுத்தல்களுடனான முழுமையான இடைசெயல் இணக்கத்தையும் வழங்குகிறது. TLS நெறிமுறையானது தகவல்பரிமாற்றம் ஒட்டுக்கேட்டல் மற்றும் கசிதல் ஆகியவை ஏற்படாதபடி வடிவமைக்கப்பட்ட விதத்தில் கிளையன்ட் - சேவையக பயன்பாடுகள் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.

HMAC-SHA2 வழிமுறையின் OpenSSH ஆதரவு

இப்போது Red Hat Enterprise Linux 6.5 இல், SHA-2 கிரிப்டோகிராபிக் ஹாஷ் செயல்பாடானது ஹாஷ் செய்தி அங்கீகரிப்புக் குறியீட்டை (MAC) உருவாக்குவதில் பயன்படுத்தப்பட முடியும், இதனால் OpenSSH இல் தரவு முழுமைத்தன்மையும் சரிபார்ப்பும் சாத்தியமாகிறது.

OpenSSL இல் முன்னொட்டு மேக்ரோ

இப்போது openssl விவரக்குறிப்புக் கோப்பு முன்னொட்டு மேக்ரோவைப் பயன்படுத்துகிறது, இதனால் openssl தொகுப்புகளை இடமாற்றம் செய்வதற்காக அவற்றை மறுகட்டமைப்பு செய்ய முடிகிறது.

NSA தொகுப்பு B கிரிப்டோகிராபி ஆதரவு

தொகுப்பு B என்பது NSA இன் கிரிப்டோகிராபிக் நவீனமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, NSA ஆல் குறிப்பிடப்பட்டுள்ள கிரிப்டோகிராபிக் வழிமுறைகளின் ஒரு தொகுப்பாகும். இது வகைப்படுத்தப்படாத தகவல் மற்றும் பெரும்பாலான வகைப்படுத்தப்பட்ட தகவல் இரண்டுக்குமான இடைசெயல் இணக்கம் கொண்ட ஒரு கிரிப்டோகிராபிக் அடிப்படையாக திகழ்கிறது. பின்வருபவை இதிலடங்கும்:
  • 128 மற்றும் 256 பிட் விசை அளவுகள் கொண்ட மேம்பட்ட குறியாக்கத் தரநிலை (AES). போக்குவரத்துப் பாய்வுக்கு, AES ஆனது குறைந்த பட்டையகல போக்குவரத்துக்கு கவுன்ட்டர் பயன்முறை (CTR) செயல்பாட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது அதிக பட்டையகல போக்குவரத்து மற்றும் சமச்சீர் குறியாக்கத்துக்கு Galois/கவுன்ட்டர் பயன்முறை (GCM) செயல்பாட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • நீள்வட்ட வளை டிஜிட்டல் கையொப்ப வழிமுறை (ECDSA) டிஜிட்டல் கையொப்பங்கள்.
  • நீள்வட்ட வளை டிஃபெ-ஹெல்மேன் (ECDH) விசை ஒப்புதல்.
  • பாதுகாப்பான ஹாஷ் வழிமுறை 2 (SHA-256 மற்றும் SHA-384) செய்தி சுருக்கம்.

பகிரபட்ட கணினி சான்றிதழ்கள்

கிரிப்டோ கருவித்தொகுப்புகள் சான்றிதழ் நம்பக முடிவுகளுக்கான உள்ளீடுகளாக நிலையான தரவின் கணினியளவிலான நம்பக சேமிப்பிடம் ஒன்றை செயல்படுத்துவதற்காக, NSS, GnuTLS, OpenSSL மற்றும் Java ஆகியவை கணினி சான்றிதழ் ஆங்க்கர்கள் மற்றும் கருப்புப்பட்டியல் தகவலை மீட்டெடுப்பதற்கான முன்னிருப்பு ஆதாரம் ஒன்றைப் பகிரும்படி பட்டியலிடப்பட்டுள்ளன. கணினி நிலையிலான சான்றிதழ்களின் நிர்வாகமானது பயன்பாட்டை எளிதாக்க உதவுவதுடன் உள்ளமை கணினி சூழல்கள் மற்றும் கார்ப்பரேட் நிலையமைத்தல்களுக்கு அவசியமாகின்றது .

அடையாள மேலாண்மையில், உள்ளமை பயனர்களின் மையநிலையிலான தானியக்க ஒத்திசைவாக்கம்

Red Hat Enterprise Linux 6.5 இலான அடையாள மேலாண்மையில், உள்ளமை பயனர்களின் மையநிலையிலான தானியக்க ஒத்திசைவாக்கமானது உள்ளமை பயனர்களை மையநிலையில் நிர்வகிப்பதை மேலும் எளிதாக்குகிறது.

NSS இல் ECC ஆதரவு

இப்போது Red Hat Enterprise Linux 6.5 இல் உள்ள பிணைய பாதுகாப்பு சேவைகள் (NSS) நீள்வட்ட வளை கிரிப்டோகிராபியை (ECC) ஆதரிக்கின்றன.

பாடம் 4. சந்தா நிர்வாகம்

Red Hat ஆதரவுக் கருவி

Red Hat Enterprise Linux 6.5 இல் redhat-support-tool எனும் புதிய தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது Red Hat ஆதரவுக் கருவியை வழங்குகிறது. இந்தக் கருவியானது Red Hat இன் சந்தாதாரர் சேவைகளுக்கான பணிமுனைய அடிப்படையிலான அணுகலை மேம்படுத்துவதுடன் Red Hat சந்தாதாரர்களுக்கு Red Hat வாடிக்கையாளர் என்ற முறையில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கம், சேவைகள் இரண்டையும் அணுகுவதற்கான கூடுதல் இடங்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இதைக் கொண்டு நமது வாடிக்கையாளர்கள் நமது சந்தா சேவைகளைக் கொண்டு தமது உதவிமைய சேவைகளை ஒருங்கிணைக்கவும் தானியக்கமாக்கவும் முடிகிறது. இந்த தொகுப்பின் அனுகூலங்கள் பின்வருமாறு:
  • பணிமுனையத்திலிருந்து தகவல் களஞ்சிய கட்டுரை மற்றூம் தீர்வுகளைக் காணுதல் (மேன் பக்கங்கள் வடிவில்).
  • பணிமுனையத்திலிருந்து வாடிக்கையாளர் விவகாரங்களைக் காணுதல், உருவாக்குதல், மாற்றம் செய்தல் மற்றும் கருத்திடுதல்.
  • பணிமுனையத்தில் இருந்து ஒரு வாடிக்கையாளர் விவகாரத்திற்கு அல்லது ftp://dropbox.redhat.com/ க்கு நேரடியாக இணைப்புகளைப் பதிவேற்றுதல்.
  • முழுமையான பதிலி ஆதரவு (அதாவது FTP மற்றும் HTTP பதிலிகள்).
  • பணிமுனையத்திலிருந்து வாடிக்கையாளர் விவகாரங்களின் இணைப்புகளை எளிதாகப் பட்டியலிடும் மற்றும் பதிவிறக்கும் வசதி.
  • வினவல் சொற்கள், பதிவு செய்திகள் மற்றும் பிற அளவுருக்கள் கொண்டு தகவல் களஞ்சியத் தேடல், தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பட்டியலில் தேடல் முடிவுகளைக் காணுதல்.
  • அறுதியிடலுக்காக பதிவுக் கோப்புகள், உரைக் கோப்புகள் மற்றும் பிற ஆதாரங்களை Shadowman தானியக்க சிக்கல் தீர்மானிக்கும் கருவிக்கு எளிதாகப் பதிவேற்றும் வசதி.
  • ஆதரவு தொடர்பான மற்ற பல கட்டளைகள்.
Red Hat ஆதரவுக் கருவி பற்றிய கூடுதல் தகவலுக்கு /usr/share/doc/redhat-support-tool-version/ கோப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆவணமாக்கத்தைப் பார்க்கவும் அல்லது இந்த தகவல் களஞ்சியக் கட்டுரையைப் பார்க்கவும்: https://access.redhat.com/site/articles/445443.

subscription-manager list இன் புதுப்பிப்புகள்

இப்போது subscription-manager list --available கட்டளையின் வெளியீட்டில் கிடைக்கும் சந்தாவின் பட்டியலுடன் Provides எனும் மற்றுமொரு புதிய புலமும் உள்ளது. இந்தப் புலம் அந்தக் கணினி தகுதி பெற்றுள்ள தயாரிப்புகளின் பெயர்களைக் காண்பிக்கும். அத்துடன் கூடுதலாக, Suggested எனும் மற்றுமொரு புதிய புலம் சேர்க்கப்பட்டுள்ளது, இது இணக்கத்தன்மைக்கு உதவி வரைவியல் பயனர் இடைமுகத்துடனான (GUI) சமச்சீர்மையை வழங்குகிறது.

பாடம் 5. மெய்நிகராக்கம்

Red Hat Enterprise Linux 6.5 இல் செய்யப்பட்டுள்ள மெய்நிகராக்கம் தொடர்பான புதுப்பிப்புகள் நேரடி இடப்பெயர்ப்பு, பிழை அறிக்கையிடல், வன்பொருள் மற்றும் மென்பொருள் இணக்கத்தன்மை போன்ற பகுதிகளிலான பல வழுநீக்கல்களைக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, செயல்திறன் மற்றும் பொது நிலைத்தன்மை மேம்படுத்தல்களும் செயல்படுத்தப்பட்டுள்லன. இவற்றில் மிக முக்கியமான மாற்றங்களுக்கு, கீழே உள்ள பிரிவுகளைக் காணவும்.

5.1. KVM

VMDK படக் கோப்பு வடிவமைப்புக்கான மேம்பட்ட ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல் Virtual Machine Disk அல்லது VMDK, பல VMware தயாரிப்புகளால் உருவாக்கப்படும் அதன் உப வடிவமைப்புகள் உட்பட, படக் கோப்பு வடிவமைப்புகள் ஆகியவற்றுக்கான எண்ணற்ற மேம்படுத்தல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Windows விருந்தினர் ஏஜன்ட் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது

இப்போது Windows விருந்தினர் ஏஜன்ட் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது, அத்துடன் Supplementary சேனலில் virtio-win இயக்கிகளுடன் அதற்கே உரிய நிறுவியுடன் வழங்கப்படுகிறது.

VHDX படக் கோப்பு வடிவமைப்புக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல் Hyper-V மெய்நிகர் வன்வட்டு அல்லது VHDX, Microsoft Hyper-V ஆல் உருவாக்கப்படும் பட வடிவமைப்புகளுக்கான வாசிக்க மட்டுமான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.

QEMU இல் GlusterFS க்கான இயல்பான ஆதரவு

QEMU இலான GlusterFS க்கான இயல்பான ஆதரவு உள்ளமைவில் மவுன்ட் செய்யப்பட்ட ஒரு FUSE கோப்புமுறைமையைப் பயன்படுத்தாமல் libgfapi தரவகத்தைப் பயன்படுத்தி GlusterFS க்கான அணுகலை சாத்தியமாக்குகிறது. இந்த இயல்பான அணுகுமுறையானது செயல்திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை வழங்குகிறது.

நேரடி மெய்நிகர் கணினிகளின் வெளிப்புற மறுபிரதிக்கான் ஆதரவு

வழங்கியில் இயங்கும் மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகள் இப்போது விருந்தினர் பட உள்ளடக்கத்தை வாசிக்க மட்டுமேயான முறையில் அணுக முடியும், இதனால் கோப்புகளை நகலெடுக்க மறுபிரதியெடுக்க முடியும்.

Linux விருந்தினர்களுக்கான CPU ஹாட் பிளக்கிங்

இப்போது Linux ஏஜன்ட்டுகளில் QEMU இன் உதவியுடன் CPU ஹாட்பிளக்கிங் மற்றும் ஹாட் அன்பிளக்கிங் ஆதரிக்கப்படுகிறது; விருந்தினர் இயங்கிக் கொண்டிருக்கும் போது CPUகள் செயல்படுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம், இதனால் ஹாட் பிளக் அல்லது ஹாட் அன்பிளக் அம்சத்தை மறுஉருவாக்கம் செய்வது சாத்தியமாகிறது.

qemu-ga-win இல் VSS ஆதரவுள்ள Microsoft Windows இல் பயன்பாடு உணர்வுள்ள freeze மற்றும் thaw

VSS (தொகுதி நிழல் நகல் சேவை) என்பது பல வசதிகளில் ஒன்றாக சரியான, இசைவான உறைவு மற்றும் தா செயல்பாடுகளுக்காக பயன்பாடுகளின் அறிவிப்பு வசதியை அளிக்கும் ஒரு Microsoft Windows API ஆகும். இந்த வசதியைக் கொண்டு மெய்நிகர் கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஸ்னாப்ஷாட்டுகள் மொத்த ஸ்டாக் (பிளாக் அடுக்கிலிருந்து விருந்தினர் பயன்பாடுகள் வரை) முழுவதும் இசைவானதாக இருக்கும், மேலும் இதை மறுபிரதி தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மெய்நிகராக்க நிர்வாக வழிகாட்டி ஐக் காணவும்

qemu-ga ஹூக்குகளைப் பயன்படுத்தி Linux இல் பயன்பாடு உணர்வுள்ள freeze மற்றும் thaw

Windows VSS பதிப்பைப் போலவே, விருந்தினரில் இயங்கும் QEMU விருந்தினர் ஏஜன்ட்டுடன் இணையக்கூடிய ஸ்கிரிப்ட்டுகளைப் பயன்படுத்தியும் பயன்பாட்டு இசைவுள்ள ஸ்னாப்ஷாட்டுகள் உருவாக்கப்படலாம். இந்த ஸ்கிரிப்ட்டுகள் பயன்பாடுகளுக்கு அறிவிப்புகளை வழங்க முடியும், அவை freeze அல்லது thaw செயலின் போது தங்கள் தரவை வட்டுக்கு வேகமாக நகர்த்திவிடும், இதன் மூலம் இசைவான ஸ்னாப்ஷாட்டுகளை எடுக்க முடிகிறது.

VMware OVF மற்றும் Citrix Xen விருந்தினர்களை KVM விருந்தினர்களாக மாற்றும் வசதி

virt-v2v மாற்றக் கருவியானது, VMware திறநிலை மெய்நிகராக்க வடிவமைப்பு (OVF) மற்றும் Citrix Xen விருந்தினர் மாற்றம் ஆகியவற்றை KVM க்கு மாற்றுவதை ஆதரிக்கும் வகையில் அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு தரமேற்றப்பட்டுள்ளது.

KVM நினைவக மறுஅளவிடல் தன்மையின் அதிகரிப்பு

ஒரு ஒற்றை விருந்தினரிலான KVM மெய்நிகர் நினைவக மறுஅளவிடல் தன்மை 4TB க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Microsoft Windows விருந்தினர்களிலிருந்து அதற்குள்ளேயே ஒலியளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதரவு

இப்போது பயனர்கள் AC'97 கோடெக்கைப் பயன்படுத்தி Microsoft Windows XP விருந்தினர்களில் ஒலியளவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

5.2. Microsoft Hyper-V

Microsoft Hyper-V இணை மெய்நிகராக்கப்பட்ட இயக்கிகள்

Microsoft Hyper-V இல் Red Hat Enterprise Linux இன் ஆதரவை மேம்படுத்துவதற்காக, Red Hat Enterprise Linux 6.5 இல் சிந்தட்டிக் வீடியோ பிரேம் பஃபர் இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வழங்கிக்கும் விருந்தினருக்கும் இடையிலான சமிக்ஞையிடுதல் நெறிமுறையானது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மெய்நிகராக்க நிர்வாக வழிகாட்டி ஐக் காணவும்

5.3. VMware

VMware இயங்குதள இயக்கிகள் புதுப்பிப்புகள்

VMware பிணைய இணை மெய்நிகராக்கப்பட்ட இயக்கியானது சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பாடம் 6. சேமிப்பகம்

fsfreeze இன் முழு ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல் fsfreeze கருவி முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. fsfreeze கட்டளை ஒரு வட்டிலுள்ள கோப்புமுறைமை ஒன்றுக்கான அணுகலை நிறுத்துகிறது. வன்பொருள் RAID சாதனங்களில் பயன்படுத்தப்படுவதற்காக fsfreeze உருவாக்கப்பட்டது, இது தொகுதி ஸ்னாப்ஷாட்டுகளை உருவாக்க உதவுகிறது. fsfreeze கருவி பற்றிய மேலும் விவரங்களுக்கு fsfreeze(8) மேன் பக்கத்தைக் காணவும்.

pNFS கோப்பு லேயவுட் கடினமாக்கல்

கணக்கீட்டு கிளையன்ட்டுகளை இயல்புநிலை சேமிப்பக சாதனங்களிலிருந்தும்/சாதனங்களுக்கும் தரவை நேரடியாகவும் இணையாகவும் எழுதவும் வாசிக்கவும் அனுமதிப்பதன் மூலம், பழைய NFS முறைமைகள் பழைய NAS சூழல்களில் மறுஅளவீடு செய்துகொள்ள pNFS உதவுகிறது. NFS சேவையகமானது மீத்தரவைக் கட்டுப்படுத்தவும் அணுகலை ஒருங்கிணைத்து நடத்தவும் மட்டுமே பயன்படுகிறது, இதனால் பல கிளையன்ட்டுகளில் இருந்து மெருமளவிலான தொகுப்புகளுக்கான முன்கணிக்கத்தக்க மறுஅளவீடு செய்யக்கூடிய அணுகல் சாத்தியமாகிறது. இந்த வெளியீட்டில் pNFS க்கான வழுநீக்கல்கள் வழங்கப்படுகின்றன.

FUSE இல் Red Hat சேமிப்பகத்தின் ஆதரவு

FUSE (பயனர் வெளியிலுள்ள கோப்பு முறைமை (Filesystem in User Space)) என்பது கெர்னலில் மாற்றங்கள் எதுவும் செய்யாமலே பயனர் வெளியில் கோப்பு முறைமைகளை உருவாக்க உதவுகின்ற பணிச்சட்டமைப்பாகும். FUSE ஐப் பயன்படுத்துகின்ற பயனர் வெளி கோப்பு முறைமைகளுக்கான (எடுத்துக்காட்டாக GlusterFS (Red Hat சேமிப்பகம்)) செயல்திறன் மேம்படுத்தல்களை Red Hat Enterprise Linux 6.5 வழங்குகிறது.

LVM மெய்நிகர் மிகைத் தோற்றப்பாடு மற்றும் ஸ்னாப்ஷாட்டுகள்

தருக்க தொகுதி நிர்வாகி மெய்நிகர் மிகைத் தோற்றப்பாடு (தின் ப்ரொவிஷனிங்) அம்சத்தைக் கொண்டிருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் தங்கள் கொள்ளளவை தங்கள் உண்மையான சேமிப்பக பயன்பாட்டு தேவைகளுடன் பொருத்திப் பார்ப்பதன் மூலம் தங்கள் சேமிப்பக கொள்ளளவு முதலீட்டை உகந்ததாக்கிக்கொள்ள முடியும். இப்போது பயனர்கள் பகிரப்பட்ட சேமிப்பகத் தொகுப்பகத்திலிருந்து மெய்நிகர் மிகைத் தோற்றப்பாட்டு தொகுதிகளை உருவாக்க முடியும். தொகுதி எழுதப்படும் போது மட்டுமே தொகுப்பகத்தில் உள்ள பிளாக்குகள் ஒதுக்கிக்கொடுக்கப்படுகின்றன, தொகுதியிலுள்ள தரவு அப்புறப்படுத்தப்பட்டதும் பிளாக்குகள் திருப்பி வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஸ்னாப்ஷாட்டுகள் அல்லது குறிப்பிட்ட நேர நகல்கள் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொகுதியில் இருந்த தரவை அதே நிலையில் அணுகும் வசதியை வழங்குகின்றன. தரவை மேலெழுதும் முன்பு அதை பாதுகாத்து வைப்பதன் மூலம் செய்யப்படுகிறது.

பலபாதை I/O புதுப்பிப்புகள்

Device Mapper Multipath இன் மறுஅளவிடல் தன்மையும் பயன்பாட்டு எளிமையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த மேம்பாடுகளில் அடங்குபவை:
  • கருவிகளின் பதிலளிப்புத்தன்மை,
  • பலபாதை சாதன தானியங்கு பெயரிடல்,
  • கூடுதல் வலிமையான பலபாதை இலக்கு கண்டறிதல்.

GFS2 இல் செயல்திறன் மேம்பாடுகள்

Red Hat Enterprise Linux 6.5 Orlov block ஒதுக்கீட்டுக் கருவியை அறிமுகப்படுத்துகிறது, இது ஒன்றுக்கொன்று உண்மையில் தொடர்புள்ள மற்றும் ஒன்றாகவே அணுகப்பட சாத்தியமுள்ள கோப்புகளுக்கான சிறப்பான இருப்பிட அமைவை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, வளக் குழுக்கள் மிக முரண்பாட்டில் இருக்கும்பட்சத்தில், செயல்திறனை அதிகரிக்க வேறு குழு பயன்படுத்தப்படுகிறது.

mdadm இல் TRIM ஆதரவு

இப்போது mdadm கருவி RAID0, RAID1, RAID10 மற்றும் RAID5 ஆகியவற்றுக்கு TRIM கட்டளைகளை ஆதரிக்கிறது.

பாடம் 7. க்ளஸ்டரிங்

pcs முழுமையாக ஆதரிக்கப்படுகிறது

pcs தொகுப்பானது முன்பு தொழில்நுட்ப மாதிரியாக சேர்க்கப்பட்டிருந்தது, இப்போது Red Hat Enterprise Linux 6.5 இல் அது முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு corosync மற்றும் pacemaker பயன்பாடுகளின் அமைவாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான கட்டளை வரிக் கருவியை வழங்குகிறது.

pacemaker முழுமையாக ஆதரிக்கப்படுகிறது

முன்பு தொழில்நுட்ப மாதிரியாக சேர்க்கப்பட்டிருந்த, மறுஅளவிடக்கூடிய உயர்நிலை கிடைக்கும் தன்மை கொண்ட க்ளஸ்டர் வள நிர்வாகியான Pacemaker, இப்போது முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

பாடம் 8. வன்பொருள் செயல்படுத்தல் தன்மை

எதிர்கால Intel SOC செயலிகளுக்கான ஆதரவு

எதிர்கால Intel System-on-Chip (SOC) செயலிகளுக்கான சாதன ஆதரவு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் Dual Atom செயலிகள், மெமரி கன்ட்ரோலர், SATA, உனிவெர்சல் அசிங்கரனஸ் ரிசீவர்/டிரான்ஸ்மிட்டர், கணினி நிர்வாக பஸ் (SMBUS), USB மற்றும் Intel பழைய பிளாக் (ILB - lpc, டைமர்கள், SMBUS (i2c_801 தொகுதிக்கூறு)) ஆகியவை அடங்கும்.

12Gbps LSI SAS சாதனங்களுக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux இல் mpt3sas இயக்கியில் LSI இலிருந்தான 12Gbps SAS சாதனங்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.

செயல்மிகு வன்பொருள் பிரிவாக்கம் மற்றும் கணினி போர்டு துளை அறிதலுக்கான ஆதரவு

செயல்மிகு வன்பொருள் பிரிவாக்கம் மற்றும் கணினி போர்டு துளை அறிதல் அம்சங்கள், உயர் நிலை கணினி இடைநிரல் அல்லது பயன்பாடுகளின் மறுஅமைவாக்கத்திற்கான விழிப்பூட்டல்களை வழங்கி மறுதுவக்காமலேயே கூடுதல் பணிச்சுமையை ஆதரிக்கும் வகையில் கணினியை வளர்த்துக்கொள்ள பயனர்களுக்கு உதவுகிறது.

எதிர்கால Intel 2D மற்றும் 3D வரைவியலுக்கான ஆதரவு

எதிர்கால Intel 2D மற்றும் 3D வரைவியலுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது, இது எதிர்கால Intel செயலிகளைப் பயன்படுத்தும் கணினிகளுக்கு Red Hat வன்பொருள் சான்றிதழளிப்புத் திட்டத்தின் மூலம் சான்றிதழளிக்க உதவுகிறது.

அதிர்வெண் உணர்திறனுள்ள பின்னுட்ட கண்காணிப்பான்

அதிர்வெண் உணர்திறனுள்ள பின்னுட்ட கண்காணிப்பான் கணினிக்கு இன்னும் சிறப்பான தகவலை வழங்கி, மின்சக்தியை சேமித்து அதிர்வெண் மாற்றம் தொடர்பான சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

ECC நினைவக ஆதரவு

எதிர்கால தலைமுறை AMD செயலிகளுக்கு பிழைத் திருத்த நெறி (ECC) நினைவகமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ECC நினைவகம் தொடர்பான கவுன்ட்டர்களையும் நிலை பிட்டுகளையும் அணுகுவதன் மூலம் செயல்திறன் மற்றும் பிழைகளைச் சோதிப்பதற்கான திறனை வழங்குகிறது.

1TB க்கும் அதிக நினைவகம் கொண்ட AMD கணினிகளுக்கான ஆதரவு

இப்போது கெர்னலானது AMD கணினிகளில் 1TB க்கும் அதிக RAM கொண்ட நினைவக அமைவாக்கங்களை ஆதரிக்கிறது.

பாடம் 9. தொழிற்துறை தரநிலைகள் மற்றும் சான்றளிப்பு

FIPS 140 மறுமதிப்பீடுகள்

கூட்டிணைய தகவல் செயலாக்கத் தரநிலைகள் (FIPS) வெளியீடு 140 என்பது, அமெரிக்க அரசாங்க பாதுகாப்புத் தரநிலையாகும், அது முக்கியமான ஆனால் வகைப்படுத்தப்பட்ட தகவலைப் பாதுகாக்கும் பாதுகாப்பு முறைமையில் பயன்படுத்தப்படும் கிரிப்டோகிராபிக் தொகுதிக்கூறு நிறைவேற்ற வேண்டிய பாதுகாப்பு தேவைகளைக் குறிப்பிடுகிறது. இந்தத் தரநிலையானது பின்வரும் நான்கு அதிகரிக்கும், தரம்சார் பாதுகாப்பு நிலைகளை வழங்குகிறது: நிலை 1, நிலை 2, நிலை 3 மற்றும் நிலை 4. இந்த நிலைகள் கிரிப்டோகிராபிக் தொகுதிக்கூறுகள் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியமுள்ள பயன்பாடுகள் மற்றும் சூழல்கள் பலவற்றுக்குப் பொருந்தும் நோக்கில் அமைக்கப்பட்டவை. பாதுகாப்புத் தேவைகள், கிரிப்டோகிராபிக் தொகுதிக்கூறு ஒன்றின் பாதுகாப்பான வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலுடன் தொடர்புடைய பகுதிகளுக்குப் பொருந்துகின்றன. கிரிப்டோகிராபிக் விவரக்குறிப்பீடு, கிரிப்டோகிராபிக் தொகுதிக்கூறு முனையங்கள் மற்றும் இடைமுகங்கள்; பங்குகள், சேவைகள் மற்றும் அங்கீகரிப்பு; வரையறுக்கப்பட்ட நிலை மாதிரியம்' இயல்புநிலை பாதுகாப்பு; செயல்பாட்டுச் சூழல்; கிரிப்டோகிராபிக் விசை நிர்வாகம்; மின்காந்தக் குறூக்கீடு/மின்காந்த இணக்கத்தன்மை (EMI/EMC); சுய சோதனைகள்; வடிவமைப்பு உத்தரவாதம் மற்றும் மற்ற தாக்குதல்களின் மட்டுப்படுத்தல் ஆகியவை இந்தப் பகுதிகளில் உள்ளடங்கும்.
Red Hat Enterprise Linux 6.5 ஆனது NSA தொகுப்பு B கிரிப்டோகிராபி மேம்பாடுகள் மற்றும் சான்றளிப்புகளை ஆதரிக்கிறது. இந்த கிரிப்டோகிராபிக் வழிமுறைகள் மிகுந்த பாதுகாப்புள்ள பிணையமாக்கல் தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன. NIST 800 - 131 இன் கீழான அரசு முகமைகளுக்கு NSA SUITE B அவசியமாகும். NSA தொகுப்பு B கிரிப்டோகிராபி கூறுகளில் இவை உள்ளடங்கும்:
  • மேம்பட்ட குறியாக்கத் தரவிலை (AES) குறியாக்க GCM பயன்முறை செயல்பாடு
  • நீள்வட்ட வளை Diffie–Hellman (ECDH)
  • பாதுகாப்பான ஹாஷ் அல்காரிதம் 2 (SHA-256)
பின்வரும் இலக்குகள் மதிப்பீட்டு செயலாக்கத்தில் உள்ளன.
  • NSS FIPS-140 நிலை 1
  • தொகுப்பு B நீள்வட்ட வளை கிரிப்டோகிராபி (ECC)
  • OpenSSH (கிளையன்ட் மற்றும் சேவையகம்)
  • Openswan
  • dm-crypt
  • OpenSSL
  • கெர்னல் கிரிப்டோ
  • AES-GCM, AES-CTS, AES-CTR மறைகுறியீடுகள்

FSTEK சான்றளிப்பு

ரஷிய கூட்டிணையம் வெளிநாட்டு விற்பனையாளர்களின் பாதுகாப்பு உரிமைகோரல்களைத் தீர்மானிப்பதற்கான பொதுவான் அதேர்வளவை சான்றளிப்புக்குப் பிறகு அமைக்கப்பட்ட தனக்கே உரிய சான்றளிப்பு செயல்முறையைக் கொண்டுள்ளது. குறிப்பாக ரஷிய அரசு முகமைகளுக்கு தகவல் பாதுகாப்பு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க, வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு ஃபெடரல் சர்விசஸ் ஃபார் டெக்னிக்கல் அன்ட் எக்ஸ்போர்ட் கன்ட்ரோல் (FSTEK) சான்றளிப்பு தேவை.
FSTEK ஆனது உரிம தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் கூடுதலாக, மக்களுக்கான மற்றும் இராணுவத்துக்கான பயன்பாடுகள் இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடிய இரட்டைப் பயன்பாடுள்ள தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது உட்பட, நாட்டின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டையும் மேற்பார்வையிடுகிறது.
ஒரு தயாரிப்பு தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தினால், செயலாக்கினால் அதற்கு வெளிநாட்டு விற்பனையாளருக்கான FSTEK சான்றளிப்பு அவசியம், மேலும் அது ரஷிய கூட்டிணையத்தில் Red Hat பிரான்டின் கீழ் கூட்டிணைய மற்றும் வணிகரீதியான விற்பனையை சட்டரீதியானதாக்கும்.
FSTEK சான்றளிப்பானது Red Hat Enterprise Linux 6 சிறு வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்காது, அது சான்றளிப்பு சுழற்சிக் காலத்தின் போது Red Hat Enterprise Linux 6 வெளியீடு முழுவதற்கும் அனுமதி வழங்கும்.

பாடம் 10. Desktop and Graphics

கிராஃபிக்ஸ் புதுப்பிப்புகள் மற்றும் புதிய வன்பொருள் ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல் செய்யப்பட்டுள்ள கிராஃபிக்ஸ் புதுப்பிப்புகளில் இவை உள்ளடங்கும்:
  • எதிர்கால Intel மற்றும் AMD சாதனங்களுக்கான ஆதரவு
  • Spice மேம்பாடுகள்
  • பல திரை ஆதரவும் தொடுதிரை ஆதரவும் மேம்படுத்தப்பட்டுள்ளது

gdm புதுப்பிக்கப்பட்டுள்ளது

gdm பயன்பாட்டுக்கான புதுப்பிப்புகளில் கடவுச்சொல் காலாவதியாவது குறித்து வரும் செய்திகளில் இருந்த சிக்கல்கள், மல்டி-சீட் ஆதரவு மற்றும் இடைசெயல் இணக்க சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன.

தரமேற்றப்பட்ட Evolution

Evolution பயன்பாடு Microsoft Exchange உடனான இடைசெயல் இணக்கம் மேம்படும் வகையில் அப்ஸ்ட்ரீமின் சமீபத்திய பதிப்புக்கு தரமேற்றப்பட்டுள்ளது. புதிய Exchange Web Service (EWS), மேம்படுத்தப்பட்ட சந்திப்பு ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட கோப்புறை ஆதரவு ஆகியவை இவற்றில் அடங்கும்.

ரிபேஸ் செய்யப்பட்ட LibreOffice

Red Hat Enterprise Linux 6.5 வெளியீட்டில், LibreOffice அதன் அப்ஸ்ட்ரீம் பதிப்பு 4.0.4 க்கு தரமேற்றப்பட்டுள்ளது.

AMD GPUகளுக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 இல் சமீபத்திய AMD கிராஃபிக்ஸ் செயலி அலகுகளுக்கான (GPUகள்) ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது

NetworkManager இல் புனைப்பெயருக்கான ஆதரவு

NetworkManager இல் புனைப்பெயருக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பதிலாக பல அல்லது இரண்டாம் நிலை IP வசதியைப் பயன்படுத்தலாம் என பயனர்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

பாடம் 11. செயல்திறன் மற்றும் மறுஅளவிடல் தன்மை

KSM மேம்படுத்தல்கள்

பக்கங்களை ஒருங்கிணைக்கும் போது சீரற்ற நினைவக அணுகலைக் (NUMA) கருத்தில் கொள்ளும் வகையில் கெர்னல் பகிரப்பட்ட நினைவகம் (KSM) மேம்படுத்தப்பட்டுள்ளது, இதனால் கணினியில் பயன்பாடுகளின் செயல்திறன் மேம்படுகிறது. அதுமட்டுமின்றி Red Hat OpenShift க்குக் கிடைக்கின்ற பயன்பாடுகளின் அடர்த்தியை அதிகரிக்கும் விதத்தில் கூடுதல் பக்க வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

tuned புதுப்பிப்புகள்

குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு உகந்த செயல்திறனை வழங்கும் விதத்தில் tuned சுயவிவரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பாடம் 12. கம்பைலர் மற்றும் கருவிகள்

தானியக்கப் பிழை அறிக்கையிடும் கருவி (ABRT), அறிக்கைக் கருவிகளின் முன்னிருப்பு தொகுப்பிலான மாற்றம்

இப்போது abrt-cli --report DIR கட்டளையை இயக்கினால், அறிக்கைக் கருவிகளின் பின்வரும் தெரிவு காண்பிக்கப்படும்:
சிக்கல் குறித்து எப்படி அறிக்கையிட விரும்புகிறீர்கள்?
 1) புதிய Red Hat ஆதரவு விவகாரம்
 2) முன்பே உள்ள Red Hat ஆதரவு விவகாரம்
 3) tar காப்பகமாக சேமி

கூறு பதிப்புகள்

இந்தப் பின்னிணைப்பு Red Hat Enterprise Linux 6.5 வெளியீட்டில் உள்ள கூறுகள் மற்றும் அவற்றின் பதிப்புகளின் பட்டியலாகும்.
கூறு
பதிப்பு
கெர்னல்
2.6.32-421
QLogic qla2xxx இயக்கி
8.04.00.08.06.4-k
QLogic ql2xxx சாதனநிரல்
ql23xx-firmware-3.03.27-3.1
ql2100-firmware-1.19.38-3.1
ql2200-firmware-2.02.08-3.1
ql2400-firmware-7.00.01-1
ql2500-firmware-7.00.01-1
Emulex lpfc இயக்கி
8.3.7.21.1p
iSCSI initiator utils
iscsi-initiator-utils-6.2.0.873-9
DM-Multipath
device-mapper-multipath-0.4.9-71
LVM
lvm2-22.02.100-4
அட்டவணை A.1. கூறு பதிப்புகள்

மறுபார்வை வரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1.0-7Thu Nov 21 2013Eliška Slobodová
Red Hat Enterprise Linux 6.5 வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.
மீள்பார்வை 1.0-3Thu Oct 3 2013Eliška Slobodová
Red Hat Enterprise Linux 6.5 பீட்டா வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.